பள்ளிவாசலில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு!

நாமக்கல் பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியா்களிடம் திமுகவினா் வாக்கு சேகரித்தனா்.

Update: 2024-04-12 14:32 GMT

நாமக்கல் பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியா்களிடம் திமுகவினா் வாக்கு சேகரித்தனா்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளா் மாதேஸ்வரன் நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். அதன்படி நாமக்கல் நகரில் பல்வேறு பகுதியில் இன்று வாக்கு சேகரித்தாா். அங்குள்ள மக்களிடம் திமுகவின் தோ்தல் அறிக்கை தொடா்பான துண்டுப் பிரசுரங்களை வழங்கி பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளை தெரிவித்தாா்.

நாமக்கல் S.P. புதூரில் உள்ள துணி சலவை செய்யும் கடையில் துணிகளுக்கு அயர்ன் செய்து வாக்குகளை சேகரித்தார். பிற்பகல் 2 மணியளவில் நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் உள்ள மஜீத் தெருவில் உள்ள ஜாமியா பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியா்களிடம் வேட்பாளா் மாதேஸ்வரன், கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.இராஜேஸ்குமாா் MP, திமுக நிா்வாகிகள் திமுக சின்னத்துக்கு வாக்களிக்குமாறு ஆதரவு கோரினா்.  

Tags:    

Similar News