திமுகவினர் பணத்தால் மக்களை விலைக்கு வாங்க நினைக்கின்றனர் - அண்ணாமலை
திமுகவினர் பணத்தை கொண்டு மக்களை விலைக்கு வாங்க முடியும் என நினைப்பதாகவும், பாஜக பெரிய கட்சி, சின்ன கட்சி என்று பார்க்காமல் அனைவரும் சகோதரர்கள் என்றே பார்க்கும் எனவும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
ஈரோடு் நாடாளுமன்ற தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து சைக்கிள் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு சித்தோடு நால்ரோட்டில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை , ஈரோடு மாவட்டத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த தமாகா வேட்பாளர் நிற்பதாகவும் , 2024 சரித்தர தேர்தல் . ஏனென்றால் யார் பிரதமர் அவர்ர்கள் என தெரிந்தே ஓட்டு போடுகிறோம் என்றார் ஈரோட்டில் புற்றுநோய்க்கு தீர்வு காண வேண்டும் என்பதால் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஒருங்கிணைந்த. புற்றுநோய் மருத்துவமனை கொண்டு வரப்படும். சாய கழிவு பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். என்றார்.
திமுகவினர் பணத்தை கொண்டு மக்களை விலைக்கு வாங்க முடியும் என நினைப்பதாகவும், கூட்டணி கட்சிகள் பலத்தை நம்பி தேர்தலில் நிற்பதால் , ஒவ்வொரு தொண்டனும் முழுமையாக உழைக்க வேண்டும் என்றும் , பாஜக பெரிய கட்சி சின்ன கட்சி என்று பார்க்காமல் அனைவரும் சகோதரர்கள் என்றே பார்க்கும் என்ற அண்ணாமலை , உயிரை கொடுத்து களத்தில் பாடுபட வேண்டும் என்றார். சைக்கிள் மெதுவாக சென்றாலும் இலக்கை நோக்கி சரியாக செல்லும் என்றும் இன்று சைக்கிள் சின்னம் ஒரு ஆமை தான் ,முயல் - ஆமை கதையில் இறுதியில் ஆமை தான் வெல்லும் என்றார்