திமுக கூட்டணியில் மதிமுக தொடரும்-துரை வைகோ!

திமுக கூட்டணியில் மதிமுக தொடரும் என துரை வைகோ கோவையில் பேட்டி அளித்தார்.

Update: 2024-06-15 11:42 GMT

திமுக கூட்டணியில் மதிமுக தொடரும் என துரை வைகோ கோவையில் பேட்டி அளித்தார்.


கோவையில் திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்க திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் புதிதாக வெற்றி பெற்றுள்ள 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர். முப்பெரும் விழாவில் பங்கேற்க மதிமுக தலைமை கழக செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி என்பது திமுக அரசின் 3 ஆண்டு கால சாதனைக்கு கிடைத்த வெற்றியாக தான் பார்க்க வேண்டும் என்றவர் தமிழகம் திராவிட மண் எனவும் மதவாத அரசியலுக்கு இடம் இல்லை என மக்கள் வாக்குகள் செலுத்து உள்ளனர் என்றார்.

திமுக கூட்டணியில் மதிமுக தொடரும் என்ற அவர் தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை வலுப்படுத்தும் விதமாக சுற்று பயணம் செய்ய உள்ளதாகவும் மீண்டும் திமுக கூட்டணி ஒரு மிகப் பெரிய வெற்றியை பெறுவோம் என்றவர் தேர்தலை ஒட்டி நாங்கள் செய்ய வேண்டிய பணிகளுக்கு ஆயத்தமாக சுட்டி காட்ட விரும்புவதாகவும் கூறினார்.மின் கட்டண உயர்வை பொறுத்தவரை தமிழக அரசு இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை என்றும் அது ஒரு வதந்தி என்றார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பொருத்தவரை மதிமுக திமுக கூட்டணியில் தொடரும் எனவும் திமுகவின் வெற்றிக்கு மதிமுக பாடுபடும் என்றார்.

மக்களவைத் தேர்தல் வெற்றி என்பது மாற்றத்திற்கான ஒரு ஆரம்பம் என்றவர் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு என தனி பெரும்பான்மை கிடையாது எனவும் கடந்த 10 ஆண்டில் பாஜக மக்கள் விரோத்திற்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்துள்ளனர் எனவும் இனி அதற்கு இடமில்லை எனவும் புதிய ஆரம்பம் நம்பிக்கை கொடுத்துள்ளதாகவும் மத்திய அரசின் சர்வதிகார போக்கு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். நாடாளுமன்ற செயல்பாடுகளில் முடிந்த அளவுக்கு பாஸ் மார்க் வாங்க வேண்டும் எனவும் தமிழக மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படுவேன் என்றார்.தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக வாஷ் அவுட் ஆகியுள்ளது எனவும் 11 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளனர் என்ற அவர் தமிழகம் மட்டுமல்ல உத்திர பிரதேசமும் மதவாதத்திற்கான மண் அல்ல என தேர்தல் மூலம் தெரிய வந்துள்ளது என்றார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் எனவும் நாம் தமிழர் கட்சி பொறுத்தவரை கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டு 8 % வாக்குகள் பெற்று இருப்பது பாராட்டத்தக்கது எனவும் மதிமுகவிற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் கொள்கை ரீதியான பல வேறுபாடுகள் இருந்தாலும் சீமானின் உழைப்பை பாராட்டத்தக்க வேண்டிய விஷயம் என்றார்.மாஞ்சோலை விவகாரத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு நிற்க வேண்டும் எனவும் அரசு தேயிலை தோட்டங்களில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என துரை வைகோ வலியுறுத்தினார்.

Tags:    

Similar News