திருத்தணியில் திமுக சார்பில் மாநில உரிமை மீட்போம் பைக் பேரணி

Update: 2023-11-23 05:33 GMT

திமுக வாகன பேரணி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 திமுக இளைஞர் அணி மற்றும் மாநில உரிமை மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது இது குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த 15ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து 55 இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சார வாகனம் பேரணி புறப்பட்டது . இந்த பிரச்சார பேரணி திருத்தணி வந்த நிலையில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவர்கள் இங்கிருந்து திருவள்ளூர் புறப்பட்டனர் அவர்கள் புறப்பட்டு செல்லும்போது திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மிதமான மழை பெய்திருந்தாலும் மழையும் பொருட்படுத்தாமல் பைக் பேரணியானது புறப்பட்டு சென்றது. பேரணியில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பூபதி மற்றும் நகர திமுகவினர் மற்றும் தொண்டர்கள் உடன் சென்றனர் இப்பேரணி 27 ஆம் தேதிக்குள் சென்னை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News