விருதுநகரில் குஷ்புவின் புகைப்படத்தை எரித்த திமுக மகளிரணியினர்

விருதுநகரில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்புவின் புகைப்படத்தை திமுக மகளிரணியினர் எரித்தனர்.;

Update: 2024-03-12 16:24 GMT

குஷ்பூ படத்தை எரித்த திமுக மகளிர் அணியினர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூவை கண்டித்து அவரது புகைப்படத்தை தீயிட்டு எரித்து திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் போதை ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ திமுக தாய்மார்களுக்கு வழங்கும் ஆயிரம் ரூபாயை பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா? என சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இதற்கு திமுக மகளிர் அணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

அந்த வகையில் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக ஒன்றிய பெருந்தலைவர் சுமதி ராஜசேகர் தலைமையில் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் சுபேதா பேகம் ஆகியோர் குஷ்பூ புகைப்படத்தினை தீயிட்டு எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டு குஷ்புக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது

Tags:    

Similar News