நாமக்கல் : திமுக செயற்குழு கூட்டம்
தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை;
Update: 2023-12-01 00:59 GMT
திமுக செயற்குழு கூட்டம்
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகம் தளபதியார் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் , டிசம்பர் 17-ல் சேலத்தில் நடைபெறும் DMK Youth Wing மாநில மாநாடு, வருகின்ற "2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகள்" குறித்தும் மற்றும் கழக ஆக்கப்பணிகள் தொடர்பாக ஆலோசனைகளை நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.