தி.மு.க. இளைஞரணி சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கல்
பரமத்தி வேலூர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2024-03-06 14:38 GMT
கல்வி உபகரணங்கள் வழங்கல்
நாமக்கல் மேற்கு மாவ ட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பாலாஜி தலைமையில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாட்டை மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர் செய்திருந்தார். நிழ்ச்சியில் மேற்கு மாவட்ட துணை அமைப்பாளர் நவலடிராஜா,பாலாஜி மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஹார்டுவேர்ஸ் கண்ணன், வேலூர் பேரூர் கழக செயலாளர் முருகன்,துணை செயலாளர் செந்தில்நாதன்,அவைத்தலைவர் மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கினர். இந்நிகழ்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்,ஆசிரியைகள்,பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் மாவட்ட தி.மு.க ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.