குடிமைப்பணி தேர்வில் மருத்துவர் வெற்றி : ஆட்சியர் வாழ்த்து!
குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்று 143ஆவது இடம் பிடித்த தூத்துக்குடி மருத்துவர் நித்திலா பிரியந்திக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.
Update: 2024-05-05 02:57 GMT
2023-ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வில் தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்த மருத்துவர் சு.நித்திலா பிரியந்தி வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 143ஆவது இடம் பிடித்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், பெற்றோர்கள் வெ.சுபாஷ் சந்திர போஸ், இரா.தா.திலகா ஆகியோர் உடனிருந்தனர்.