மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் ஆவணங்களை எரிந்து நாசம்!
இரண்டு மணி நேரம் நேரம் போராடி தீயை அணித்த தீயணைப்பு துறையினர்.
Update: 2024-04-23 17:28 GMT
கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள நடராஜ தேவர் காலணியில் உள்ள வீட்டின் உரிமையாளர் சுப்ரமணியம்.இவரது வீட்டில் குடியிருந்து வரும் பிரேம்குமார்-உமாமகேஷ்வரி தம்பதியினர் இன்று வீட்டை பூட்டிவிட்டு பல்லடம் சென்றுள்ளனர்.மதியம் சுமார் ஒன்றரை மணியளவில் மின்தடை ஏற்பட்ட போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வீட்டின் உள்ளே வைக்கபட்டு இருந்த கட்டில்,பீரோ மற்றும் அதன் உள்ளே வைக்கபட்டிருந்த வங்கி புத்தகம்,பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.தீவிபத்து குறித்து அருகில் வசிப்பசர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரம் பேராடி தீயை அனைத்தனர்.அருகருகே நெருக்கமாக வீடுகள் உள்ள பகுதியில் இந்த தீ விபத்தானது நடைபெற்ற நிலையில் தீயணைப்பு துறைவினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.