சிறு கோவில் பூசாரிகளுக்கு மாடுகள் தானம்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் சிறு கோவில் பூசாரிகளுக்கு மாடுகள் தானமாக வழங்கப்பட்டது.;

Update: 2024-02-15 02:47 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் காளை மாடுகள் பசுக்கள் கன்று குட்டிகள் ஆகியவற்றை தானமாக வழங்குவார்கள் கோவிலில் வைத்துபராமரிக்கும் அளவு போக மீதமுள்ளவற்றை மாவட்டத்தில் உள்ள சிறு கோவில் பூசாரிகளுக்கு தானமாக கொடுத்து வளர்த்து வர கொடுப்பதுவழக்கம். அதன்படிஇன்று பசுமாடு, காளைகள், கன்றுடன் கூடிய பசு, சிறு கன்று குட்டி, என 12 மாடுகள்மாவட்டத்திலுள்ள சிறு கோவில் பூசாரிகளுக்கு வழங்கப்பட்டது.

Advertisement

மலைக்கோவில் நடந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மண்டல நகர அமைப்பு திட்ட குழு உறுப்பினர்மதுரா செந்தில் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் கோவில் செயல் அலுவலர் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன் அருணா சங்கர் பிரபாகரன் அர்ஜுனன்,நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு,மாவட்ட துணைச் செயலாளர் மயில்சாமி, நகர திமுக செயலாளர் கார்த்திகேயன்,திருச்செங்கோடு ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல், எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News