பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட வரைவு வழிகாட்டி பதிவேடு - ஆட்சியர்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக இந்திய முத்திரைச்சட்டம் பிரிவு 47யுயு ன் கீழான தமிழ்நாடு முத்திரை (சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீடு செய்தல், வெளியிடுதல் மற்றும் திருத்தி அமைத்தலுக்கான மதிப்பீட்டு குழு ஏற்படுத்துதல்) விதிகள் 2010, விதிகளில் விதி 4(2)-ன்படி மையமதிப்பீட்டு குழு 26.04.2024-ல் நிர்ணயம் செய்த நெறிமுறை கோட்பாட்டிற்கு இணங்க நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் விபரங்கள் இணையதள முகவரியில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மீது ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின், அதனை 15 நாள்களுக்குள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மதிப்பீட்டு துணைக்குழுவிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்திட பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.