தர்மபுரி மாவட்டத்தில் வரைவு வழிகாட்டி பதிவேடு:ஆட்சியர் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-13 13:14 GMT

மாவட்ட ஆட்சியர் 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47ஏஏ-ன் கீழ் தமிழ்நாடு முத்திரை விதிகள் 2010-4 (2) -ன்படி மைய மதிப்பீட்டு குழு நிர்ணயம் செய்த நெறிமுறை கோட்பாட்டிற்கு இணங்க தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த பதிவேடு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் தாலுகா அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் www.tnreginet.gov.in என்ற இணையதள முகவரியில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப் பட்டுள்ளது.

இதன் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துரைகள் இருந்தால் அது பற்றி 15நாட்களுக்குள் மாவட்ட கலெக்டர் தலைமையிலான மதிப்பீட்டு துணைக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும்.

ஆட்சேபனைகள் மற்றும் கருத்துரைகளை மதிப்பீட்டுத் துணைக் குழு, மாவட்ட கலெக்டர் அலுவலகம், தர்மபுரி மாவட்டம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News