வாய்க்கால் பிரச்சனை: இன்ஜினியரை தாக்கிய 3பேர் மீது வழக்கு.

வாய்க்கால் பிரச்சனையில் இன்ஜினியரை தாக்கிய 3பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-12-25 10:20 GMT
பைல் படம்

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே காருப்பாறை கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். விவசாயி.  இவரது மகன் சரண்ராஜ் (33) என்பவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனது வயலில் தண்ணீர் பாய்ந்து ஓட வாய்க்கால் போடாமல் நாற்று நட்டதாக கூறப்படுகிறது.       இது தொடர்பாக சரண்ராஜ்கும்,  சிவகுமாருக்கும்  முன்விரோதம் ஏற்பட்டது.

Advertisement

இந்நிலையில் சம்பத் தன்று சரண்ராஜ் வயலில் வேலை செய்த தந்தை சிவலிங்கத்தை பார்த்து வர வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.      காருப்பாறை சிவகுமார் வீட்டு முன்பு செல்லும் போது சண்முகராஜை தடுத்து நிறுத்தி  சிவகுமார் மற்றும் அவரது 16 மற்றும் 17 வயதுடைய  இரு மகன்கள் சேர்ந்து சரண்ராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த  சரண்ராஜ் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் மனவளக் குறித்து போலீசார் சிவகுமார் மற்றும் அவரது இரு மகன்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News