அன்னப்பன் பேட்டை திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா
தரங்கம்பாடி அருகே அன்னப்பன்பேட்டை திரௌபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Update: 2024-05-21 02:26 GMT
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அன்னப்பன் பேட்டை கிராமத்தில் மிகவும் பழமையான திரெளபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 10- ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் திரெளபதி அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது .
முன்னதாக அன்னப்பன் பேட்டை குளக்கரையிலிருந்து சக்தி கரகத்துடன் விரதம் இருந்த பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தனர். கோவில் முன்பு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளிக்க அங்கு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.