தமிழ்நாடு போயர் பேரவையின் திராவிட மக்கள் புரட்சி கழகம் தொடக்கம்

போயர் மக்களின் வளர்ச்சிக்காகவும், உரிமைகளுக்காகவும் திராவிட மக்கள் புரட்சி கழகம் துவக்கப்பட்டுள்ளதாக, பேரவை மாநில தலைவர் கூறினார்.

Update: 2024-03-23 07:10 GMT

போயர் மக்களின் வளர்ச்சிக்காகவும், உரிமைகளுக்காகவும் திராவிட மக்கள் புரட்சி கழகம் துவக்கப்பட்டுள்ளதாக, பேரவை மாநில தலைவர் கூறினார். 

தமிழ்நாடு போயர் பேரவை மாநில தலைவர் மூர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக போயர் மக்களின் வளர்ச்சிக்காகவும், உரிமைகளை பெற்று வாழவும் போயர் மக்களின் கட்சியாக திராவிட மக்கள் புரட்சி கழகம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இது முறையாக பதிவு செய்யப்பட்டு கொள்கைகள் அறிவிக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் திராவிட மக்கள் புரட்சி கழகம் போட்டியிடாது. 76 ஆண்டுகளில் இதுவரை போயர் மக்களை சேர்ந்தவரை தேர்தலில் போட்டியிட எந்த கட்சியும் வாய்ப்பு அளிக்கவில்லை. ஒரு தொகுதியில் ஒரு லட்சம் முதல் 1½ லட்சம் வரை போயர் வாக்காளர்கள் 17 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இருக்கிறார்கள்.

போயர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எந்த கட்சிக்கு ஆதரவு என்று விரைவில் அறிவிக்கப்படும். இனிவரும் தேர்தல்களில் போயர் மக்கள் அதிகமாக வாழும் தொகுதியில் திராவிட மக்கள் புரட்சி கழகம் போட்டியிடும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பொதுச்செயலாளர் பெரியபொண்ணு, துணைத்தலைவர் ராஜா, பொருளாளர் சந்திரன், துணை பொதுச்செயலாளர் பொன்னையன், மாநில இளைஞர் அணி செயலாளர் ராமச்சந்திரன், கொள்கை பரப்பு செயலாளர் குப்புராஜ், தொழிற்சங்க செயலாளர் ராஜூ, தலைமை ஆலோசகர் கந்தசாமி, ஆலோசகர் ரங்கநாதன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News