திராவிட கட்சிகள் தமிழக அரசியலை சாக்கடையில் தள்ளியுள்ளது:அண்ணாமலை
ஸ்ரீபெரும்புதுார் தேரடி பகுதியில் இருந்து தொடங்கிய பாதயாத்திரை பேருந்து நிலையம் வந்து நிறைவடைந்தது.
ஸ்ரீராமானுஜர் அவதரித்த புனித பூமியான ஸ்ரீபெரும்புதுார் சட்டசபைத் தொகுதியில் 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை பயணம், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி நடைபோட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் தேரடி பகுதியில் இருந்து தொடங்கிய பாதயாத்திரை பேருந்து நிலையம் வந்து நிறைவடைந்தது.
வழிநெடுகிலும் தொண்டர்கள் ஏராளமானோர் பூங்கொத்துக் கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இரு திராவிட கட்சிகளும் தமிழக அரசியலை சாக்கடையில் தள்ளியுள்ளன. தி.மு.க., 35 எம்.பி.,க்களில், 15 பேர்களின் மீது ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பாரத பிரதமரின் நடவடிக்கையால் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் தொழிற்சாலை நிறைந்த முதன்மை பகுதியாக உள்ளது.
ஆனால் தி.மு.க., ஆட்சியில் 30 சதவீதம் கமிஷன் இல்லாமல், ஸ்ரீபெரும்புதுாரில் தொழிற்சாலை துவங்க முடியவில்லை. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் பாபு, மற்றும் மாவட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.