திண்டுக்கல் மாவட்டத்தில் 10 பேருக்கு கனவு ஆசிரியா் விருது
திண்டுக்கல் மாவட்டத்தில் 10 பேருக்கு கனவு ஆசிரியா் விருது வழங்கப்பட உள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-21 08:39 GMT
கோப்பு படம்
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆசிரியா்கள், தமிழக அரசின் கனவு ஆசிரியா் விருது பெற்றனா். அரசு, அரசு உதவி பெறும் அனைத்து நிலை பள்ளிகளைச் சேர்ந்த (இடைநிலை, பட்டதாரி, முதுநிலை) ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில், கனவு ஆசிரியா் விருது வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான கனவு ஆசிரியா் விருதுக்கான தேர்வா்கள்,
இணைய வழியில் நடத்தப்பட்ட தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனா். மாநிலம் முழுவதும் மண்டல வாரியாக நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் 8,096 பேர் கலந்துகொண்டனா். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பட்டதாரி ஆசிரியா்கள், 6 இடைநிலை ஆசிரியா்கள் என மொத்தம் 10 பேர் கனவு ஆசிரியா் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனா்.