போடிநாயக்கனூரில் உயிரை பறித்த போதை
போடிநாயக்கனூரில் மதுபோதையில் இருந்தவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-14 18:27 GMT
கோப்பு படம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜேகே பட்டி செளண்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் நேற்று மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து அவரது தாயார் வண்ணக்கிளி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.