தனியார் கழிவுகள் போர்வெல்லில் இறக்குவதால் குடிநீர் ஆதாரம் பாதிப்பு

தென்னிலையில் நடந்த கிராம சபா கூட்டத்தில் ஆயில் நிறுவன கழிவுகளை போர்வெல்லில் இறக்குவதால், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக புகார் அளிக்கப்பட்டது.

Update: 2024-02-08 03:19 GMT

 ஜனவரி 26 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்திலும் அனைத்து ஊராட்சிகளையும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதேசமயம் கரூர் மாவட்டம் தென்னிலை தெற்கு ஊராட்சியிலும், கோடாந்தூர் ஊராட்சியிலும் முறையாக கிராம சபை கூட்டத்தை கூட்டவில்லை என, பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் மீண்டும் இன்று கூட்டம் நடத்த உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் தென்னிலை தெற்கு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் துரைராஜ் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் ஜோதிமணி, உள்ளாட்சி பிரதிநிதிகள்,கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கையெழுத்து போடத் தெரியாத கிராம மக்கள், கைநாட்டு வைத்து கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஊராட்சியில் கடந்த 4,5- வருடங்களாக செயல்பட்டு வரும் முருகன் ஆயில் நிறுவனம், ஆயில் தயாரிக்கும் போது ஏற்படும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல், போர்வெல் அமைத்து அதற்குள் இறக்கி வந்த்தாக கூறப்படுகிறது. இதனால், ஊராட்சி பகுதிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்கள் கெட்டு போனது குறிப்பாக முருகன் நிறுவனத்தின் அருகில் அமைக்கப்பட்ட பொதுமக்கள் போர்வெல் பைப்பில் ஆய்வு மேற்கொள்ள கோரிக்கை வைத்தவுடன், இதற்கு முந்தைய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி, போர்வெல் கை பம்பை அகற்றிவிட்டு, போர்வெல் குழாயை அடைத்து விட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதனால், இன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில், கரூர் மாவட்ட வினோபாவா சேவா சங்க செயலாளர் செல்லமுத்து இயற்கைக்கு மாறாக செயல்படும் முருகன் ரீபண்ட் ஆயில் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனுவினை அளித்தார். மேலும், இதுபோல் பல மனுக்களை அளித்துள்ளதாகவும், ஊராட்சியின் சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனி ஏனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்ததாக தெரிவித்தார்.

Tags:    

Similar News