நெல்லையில் குடிநீர் விநியோகம் - ஆணையாளர் தகவல்

வெள்ளத்தால் நீரேற்று நிலையங்கள் சேதமடைந்துள்ளதால் நெல்லை மாநகராட்சியில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-26 02:47 GMT

ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் 

நெல்லையில் பெய்த வரலாறு காணாத கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 15 தலைமை நீரேற்று நிலையங்கள் மற்றும் பம்ப் அறைகளில் பொறுத்தப்பட்டிருந்த பம்ப் செட்டுகள்,பேனல் போர்டுகள், இணைப்பு மின் வயர்கள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு இயக்க முடியாத நிலை உருவாகியிருந்தது.இதன் காரணமாக பொதுமக்களுக்கு மாநகராட்சியின் 49 லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு முலம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News