சங்ககிரியில் டிரைவர்க்கு நடந்த சோகம்
சேலம் மாவட்டம், வடுவன்காட்டை பகுதியில் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-02-26 03:13 GMT
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே மாவெலிபாளையம், வடுவன்காட்டை சேர்ந்தவர் திவாகர் (வயது 25), லாரி டிரைவர். இவர் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, தீராத வயிற்று வலி இருந்ததாகவும், அதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் குணமாகாததால் திவாகர் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணை யில் தெரிய வந்தது.