மது அருந்திவிட்டு மினி பஸ் இயக்கிய ஓட்டுநருக்கு அபராதம்

விருதுநகர் மாவட்டம், திருதங்கல் அருகே மது அருந்திவிட்டு மினி பஸ் இயக்கிய ஓட்டுநருக்கு அபராதம் விதித்தனர்.

Update: 2024-06-03 02:08 GMT

மது அருந்திவிட்டு மினி பஸ் இயக்கிய ஓட்டுநருக்கு அபராதம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி டி.எஸ்.பி. சுப்பையா உத்தரவுபடி போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் திருத்தங்கல் ரயில்வே ஸ்டேசன் அருகில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருத்தங்கல்லில் இருந்து சுக்ரவார்பட்டி வழியாக எம்.புதுப்பட்டிக்கு செல்லும் மினி பஸ் டிரைவர் காக்கி சட்டை அணியாமல் கலர் சட்டை அணிந்து பஸ்சை ஓட்டி சென்றதை போலீசார் கவனித்தனர்.

மினி பஸ்சை நிறுத்தி டிரைவர் சானார்பட்டியை சோ்ந்த சத்தியமூர்த்தியை எச்சாிக்கை செய்தனர். அப்போது மினி பஸ் டிரைவர் சத்தியமூர்த்தி மது போதையில் இருந்தததை கண்டு போலீசாரும், பஸ்சில் இருந்த பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பயணிகள் இறக்கி விடப்பட்டு மினி பஸ் திருத்தங்கல் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் குறித்து மினி பஸ் உரிமையாளருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மினி பஸ் டிரைவர் சத்தியமூர்த்திக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.

Tags:    

Similar News