தாசில்தார்களின் டிரைவர்கள் பணியிட மாற்றம்
விருதுநகர் மாவட்டத்தில் 14 அரசு அதிகாரிகளின் டிரைவர்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.;
Update: 2024-06-23 06:02 GMT
ஆட்சியர் ஜெயசீலன்
விருதுநகர் மாவட்டத்தில் சில தாசில்தார்களின் டிரைவர்கள் அடுத்தடுத்து எழுந்த புகார்களின் காரணமாகவும், சில டிரைவர்களின் விருப்பத்தின் காரணமாகவும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் அதன்படி 14 டிரைவர்களை மாற்றம் செய்யப்பட்டனர். ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, திருச்சுழி ஆகிய பகுதியை சார்ந்த 14 டிரைவர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது