குதிரைகள் மூலம் எடுத்து செல்லப்பட்ட ஓட்டு இயந்திரங்கள்
நத்தம் மலைப்பகுதிக்கு குதிரைகள் மூலம் ஓட்டு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டன.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-18 14:58 GMT
குதிரைகள் மூலம் கொண்டுவரப்பட்ட வாக்கு இயந்திரங்கள்
நத்தம் கரந்தமலை சிறுமலை பகுதியில் ஏராளமான மலை வாழ் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு இன்னும் சாலை வசதி இல்லாமல் உள்ளது. வனப்பகுதியில் சாலை அமைப்பதற்கு வனத்துறையினர் அனுமதி மறுக்கின்றனர்.
மலைப்பகுதியில் சாலை என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் கழுதைகள் மற்றும் குதிரைகள் மூலமே உணவுப் பொருட்களை பயிரிட்ட விளைப் பொருட்களை எடுத்து வருகின்றனர். நத்தம் லிங்கவாடி மலையூர் பகுதிக்கு குதிரை மூலம் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.