மேலூர் அருகே கார் கண்ணாடிகளை உடைத்து போதை ஆசாமிகள் அட்டூழியம்

மேலூர் அருகே காரின் கண்ணாடிகளை உடைத்து போதை ஆசாமிகள் அட்டூழியம்:மேலூர் போலீசார் விசாரணை;

Update: 2024-05-03 16:58 GMT

கண்ணாடி உடைக்கப்பட்ட கார்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பெருமாள்பட்டியில் வசிப்பவர் நியாஸ்அகமது இவர் நேற்று இரவு வழக்கம் போல் தனது வீட்டிற்கு முன்னால் காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் தனது குடும்பத்தினருடன் உறங்கியுள்ளார்.

அப்பொழுது பக்கத்து வீட்டுக்காரரான ஆட்டோ ஓட்டுனர் ராஜா முகமது நள்ளிரவு தனது ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது நியாஸ் அகமதுவின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவருக்கு போன் செய்துள்ளார்.

Advertisement

அதனை அடுத்து வெளியில் வந்து பார்த்த நியாஸ் தனது காரின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே மேலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து அங்கு வந்த காவல் துறையினர் நள்ளிரவில் அவர்களை தேடி உள்ளனர். அப்பொழுது மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலையில் சென்ற மேலும் பல கார்களின் கண்ணாடிகளை மர்ம போதை ஆசாமிகள் உடைத்து இருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மேலூர் போலீசார் மர்ம போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர். இது குறித்து அப்பகுதியில் வசிப்பவர்கள் கூறுகையில் அடையாளம் தெரியாத நபர்கள் பல பேர் அப்பகுதியில் சுற்றி திரிவதாகவும் அவர்கள் எப்பொழுதும் போதையில் இருப்பதாகவும் எனவே நள்ளிரவு நேரங்களில் போலீசார் இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு மர்ம போதை ஆசாமிகளை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News