குடும்பப்பிரச்சனை காரணமாக மூன்று பேர் தாக்கியதில் ஒருவர் படுகாயம்!
குடும்ப பிரச்சனையின் காரணமாக தகராறில் ஈடுபட்டு மூன்று பேர் தாக்கியதில் ஒருவர் படுகாயம். இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-06 10:15 GMT
காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை
குடும்ப பிரச்சனையின் காரணமாக தகராறில் ஈடுபட்ட ஒரு நபரை மூன்று நபர்கள் சேர்ந்து கையாளும், அறிவாலும் தாக்கியதில் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்ணா சமுத்திரத்தை சேர்ந்தவர் தங்கதுரை வயது 27 இவருக்கும் இவர்களுடைய உறவினர்களான செல்வி, நாகராஜ், சுப்பிரமணி ஆகியோருடன் குடும்ப ரீதியாக பிரச்சனை இருந்து வந்ததாகவும் இந்நிலையில் தங்கதுரை உடன் மூன்று நபர்களும் வாய் தகராறில் ஈடுபட்டதாகவும் இந்த பிரச்சனை காரணமாக மூன்று பேரும் சேர்ந்து தங்கதுரையை அறிவாளால் வெட்டி படுகாயம் அடைந்துள்ளார். இந்நிலையில் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது சம்பந்தமாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விராலிமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.