மனைவியுடன் தகராறு வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
கொட்டாரத்தில் மனைவியுடன் ஏற்பட்டத் தகராறில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
Update: 2024-04-01 15:15 GMT
கொட்டாரத்தில் மனைவியுடன் ஏற்பட்டத் தகராறில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் ராமச்சந்திர நகரை சேர்ந்தவர் விஜய் (28). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். விஜய் கூலி வேலை செய்து வந்தார். இவரது உறவினர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மனைவி குழந்தைகளுடன் சென்று விட்டு வீடு திரும்பிய விஜய்க்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மணமடைந்த விஜய் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.