பெரும்பள்ளம் பகுதியில் அதிக வெப்பம் காரணமாக கார் தீப்பற்றி எரிந்து சேதம்

பெரும்பள்ளம் பகுதியில் அதிக வெப்பம் காரணமாக கார் தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்தது.

Update: 2024-01-07 13:15 GMT

தீப்பற்றி எரிந்த கார்

செய்யாறு அருகே பெரும்பள்ளம் பகுதியில் அதிக வெப்பம் காரணமாக கார் தீப்பற்றி எரிந்து சேதம், நல்வாய்ப்பாக காரில் பயணம் செய்தவர்கள் கீழே இறங்கியதால் உயிர் சேதம் தவிர்ப்பு, தகவலறிந்த செய்யாறு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அனைத்தனர்.

செய்யாறு போலீசார் விசாரணை. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பெரும்பள்ளம் பகுதியில் அதிக வெப்பம் காரணமாக கார் தீப்பற்றி எரிந்து சேதம் ஏற்பட்டது , நல்வாய்ப்பாக காரில் பயணம் செய்தவர்கள் கீழே இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் குருகார்த்திக் என்பவர் செய்யாறு ஞானமுருகன் பூண்டி பகுதியில் உள்ள உறவினர்களை அழைத்து கொண்டு சொந்த ஊரான வேலூர் அடுக்கம்பாறை சென்று சபரிமலை செல்ல உள்ளவர்களை பார்க்க செய்யாறு ஆரணி செல்லும் வழியில் பெரும்பள்ளம் பகுதியில் சென்ற போது கார் இன்ஜின் சூடாகி புகை கக்க தொடங்கியது.

உடனடியாக காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி தப்பினர். பின்னர் காரில் பிடித்த தீ மளமளவென கார் முழுமையும் பற்றி ஏரிந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த செய்யாறு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அனைத்தனர், மேலும் கார் தீ பற்றி ஏரிந்த சம்பவம் குறித்து செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News