உரிய ஆவணமில்லாததால் ரூ. 2.5 லட்சம் பறிமுதல்

சிவகாசியில் உரிய ஆவணமில்லாததால் ரூ. 2.5 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-28 04:42 GMT
 சிவகாசியில் உரிய ஆவணமில்லாததால் ரூ. 2.5 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சிவகாசி பகுதிகளில் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.2½ லட்சம் பறிமுதல்... விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.2½லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.சிவகாசி சட்டமன்றதொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் போது ராஜபாளையத்தை சேர்ந்த ஜெகத்சங்கர் என்பவரிடம் ரூ.51ஆயிரத்து 570-ம்,மேலும் சிவகாசி அருகே உள்ள அதிவீரன்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரிடம் ரூ.64 ஆயிரத்து 400-ம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல கட்டளைப்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவரிடம் ரூ.80 ஆயிரமும்,சிவகாசி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் என்பவரிடம் ரூ.64 ஆயிரமும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ஒரே நாளில் வெவ்வேறு பகுதியில் சோதனை செய்ததில் மட் டும் 4 பேரிடமிருந்து அதிகாரிகள் ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 970-யை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News