போதிய நீர் இல்லாததால் அத்திக்கடவு தண்னீர் திறப்பதில் தாமதம்
அத்திக்கடவு திட்டம் முழுவதும் முடிவுற்றுள்ளது. போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் திறப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஆறு மோட்டர்களில் மூன்று மோட்டர் இயக்கும் அளவில் கூட தண்ணீர் இல்லை. தமிழக முதல்வரின் திட்டம் முழுமையாக தண்ணர் கொண்டுவர வேண்டும் என்பது தான் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
கோவை எஸ்.எஸ். குளம் ஒன்றியம் கொண்டையம் பாளையம் ஊராட்சி வையம்பாளையத்தில் அமைந்துள்ள உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தில் அவருடைய 99 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.அரசு சார்பில் கொண்டாடப்பட்ட விழாவில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா தலைமையில் கோவை கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், அன்னூர் தாசில்தார் நித்தில வள்ளி ஆகியோர் முன்னிலையில் வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு நாராயணசாமி நாயுடு அவர்களின் திருவுருவ சிலை மற்றும் நினைவிடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் விவசாயிகளின் நம்பிக்கைக்கு உரிய தலைவராக இருந்தவர் நாராயணசாமி எனவும் விவசாயிகளுக்காக போராடி பல்வேறு திட்டங்களை பெற்றுக்கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞருடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் என தெரிவித்தார்.அவரது பிறந்த தினமான இன்று நினைவிடத்திற்கு செல்லுமாறு இரு தினங்களுக்கு முன்பே தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தியாக கூறினார்.அத்திக்கடவு திட்டம் முழுவதும் முடிவுற்றுள்ளதாக கூறியவர் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் திறப்பதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்த அவர் ஆறு மோட்டர்களில் மூன்று மோட்டர் இயக்கும் அளவில் கூட தண்ணீர் இல்லை என்றவர் தமிழக முதல்வரின் திட்டம் முழுமையாக தண்ணர் கொண்டுவர வேண்டும் என்பது தான் என தெரிவித்தார்.