திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்!
அனந்தலை கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2024-06-03 11:35 GMT
அனந்தலை கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா அனந்தலை கிராமத்தில் கிருஷ்ணர் பாண்டவர் சமேத திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னதாக மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து, மகாபாரத நாடகம் நடைபெற்றது. நேற்று நடந்த துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை நாடகக் கலைஞர்கள் தத்ரூபமாக நடித்துக் காட்டினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.