கழிவறையில் வழுக்கி விழுந்து டையிங் பட்டறை உரிமையாளர் உயிரிழப்பு

பள்ளிபாளையத்தில் கழிவறையில் வழுக்கி விழுந்து டையிங் பட்டறை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-10 16:06 GMT

உயிரிழந்த தங்கவேலு

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள, கண்டிப்புதூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கவேலு வயது 49. இவர் டையிங் பேக்டரி சொந்தமாக வைத்துள்ளார். இவருடைய மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், இரண்டு மகள்கள் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை தங்கவேலுவின் தாயார் மூத்த மகன் சரவணனுக்கு போன் செய்து, மகன் தங்கவேலு பாத்ரூமிற்கு சென்று விட்ட நிலையில், நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை கதவை தட்டியபோது கதவு திறக்கவில்லை.எனவே உடனே வந்து பார்க்குமாறு கூறியுள்ளார்.

இதனை அடுத்து சரவணன் இளங்கோவன் வீட்டிற்கு சென்று, கழிவறையை உடைத்து உள்ளே பார்த்த பொழுது அவர் ரத்த காயங்களுடன் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சரவணன் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பள்ளிபாளையம் போலீசார் தங்கவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர் கழிவறையில் தவறி விழுந்து உயிர் இழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என பள்ளிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்..

Tags:    

Similar News