சிவகாசி : செயல்படாத சிக்னல்கள் - சரி செய்யப்படுமா?

சிவகாசியில் செயல்படாத போக்குவரத்து சிக்கனல்களை சரி செய்து போக்குவரத்து நெரிசலை குறைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-15 04:18 GMT
செயல்படாத சிக்னல்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் பகுதியில் போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது,நகருக்குள் விதிகளை மீறி லாரிகள் இயக்கப்படுகின்றன.இதனால் சிவகாசி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கி தவிக்கின்றனர்.சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது கார்,டூவீலர்,ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சிவகாசி மாநகரிலுள்ள விருதுநகர், திருவில்லிபுத்தூர்,சாத்தூர், விளாம்பட்டி ரோட்டில் காலை, மாலை நேரங்களில் கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் இருக்கும்.நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் பஸ்நிலையம் சந்திப்பு காரனேசன்,பைபாஸ் சாலை இரட்டை பாலம் ஆகிய இடங்களில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த சிக்னல்கள் அமைக்கப்பட்ட ஒரு சில மாதங்கள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் தற்போது வரை காட்சி பொருளாக நிற்கிறது.

போககுவரத்து நெரிசலான நேரங்களில் போலீசார் பணியில் இருந்தால் மட்டுமே வாகன ஓட்டிகள் முறையாக செல்கின்றனர்.போலீசார் இல்லாத நேரங்களில் அவசர கதியில் சந்திப்பு சாலைகளில் செல்வதால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது.இதனால் சாலை விபத்தில் பலி எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

Tags:    

Similar News