கழுகுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் வனச் சரகத்தில் கழுகுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
மேற்குத்தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள திருநெல்வேலி வன உயிரினச் சரணாலயத்தில் புலி, யானை,காட்டு மாடு, சிறுத்தை, மான், கரடி போன்ற பல்வேறு வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இச்சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுப்பு, யானைகள் கணக்கெடுப்பு, பறவைகள் கணக்கெடுப்பு ஆகியவை நடத்தப்படுவது வழக்கம்.
கழுகுகள் அழிந்து வரும் நிலையில் உள்ளதால், அதை பாதுகாப்பதற்கான அவசியத்தை உணா்த்தும் வகையிலும், அதன் வாழ்விடத்தை மேலாண்மை செய்வதற்கும், முதல் முறையாக கழுகுகளுக்கென கணக்கெடுப்பு நிகழாண்டு தொடங்கியுள்ளது. 2 நாள்கள் நடைபெறும் இக்கணக்கெடுப்பு தொடங்கியது. திருநெல்வேலி வன உயிரினக் காப்பாளா் முருகன் உத்தரவுப்படி கடையநல்லூா் வனச்சரகா் சுரேஷ் தலைமையில் வனவா்கள் முருகேசன், அம்பலவாணன், ரவீந்திரன், வனக் காப்பாளா்கள் ராமச்சந்திரன், ராஜா, மாதவன், சுகந்தி, முத்துசாமி, வனக்காவலா்கள் ஆறுமுகம், மாடசாமி, வேட்டைத் தடுப்புக் காவலா்கள் ஆகியோா் அடங்கிய குழுவினா் மேக்கரை, வடகரை, கடையநல்லூா், கருப்பாநதி அணைப்பகுதி மற்றும் சொக்கம்பட்டி பகுதியில் கணக்கெடுக்கும் பணி மேற்கொண்டு வருகின்றனா்.