ஊட்டி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி
உயிர்ப்பின் பெருவிழாவான ஈஸ்டரை முன்னிட்டு ஊட்டி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்தனை நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்தார். இந்த நிகழ்வை கிறிஸ்தவர்கள் உயிர்ப்பு பெருவிழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். ஊட்டியில் தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் ஊட்டி மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் கலந்துகொண்டு இரவு திருப்பலியை நிறைவேற்றினார். இத்திருப்பலியில் பங்கு தந்தை ரவி லாரன்ஸ், உதவி பங்கு தந்தை ஜூட் மற்றும் ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக ஆலயத்தில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு முதல் ஒளியை ஆயர் ஏற்றினார் .
பின்னர் மக்கள் அனைவருக்கும் மெழுகுதிரி வழங்கப்பட்டு அனைவரும் கைகளும் மெழுகுதிரி ஏற்றினர். பின்பு மின் விளக்குகள் அனைத்தும் ஒளிர் விடப்பட்டது. அப்பொழுது கல்லறையிலிருந்து இயேசு கிறிஸ்து உயிர் எழுது உயிர்த்தெழுந்த நிகழ்வை தத்துரூபமாக ஆலயத்தில் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுகக என்னும் பாடல் பாடப்பட்டு, சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடந்தது. இரவு திருப்பலியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 700க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.