எடப்பாடி : தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கள்ளுக்கடை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்;
Update: 2024-03-31 07:03 GMT
வாகன தணிக்கை
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதை தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் இரவு பகலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூலாம்பட்டி செல்லும் வழியில் கள்ளுக்கடை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அந்த வழியாக செல்லும் கார்களை நிறுத்தி சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன அப்போது அந்த வழியாக வந்த காரில் விஜய் படம் பொறிக்கப்பட்டிருந்தது அந்த விஜய் படத்தை மறைக்கும்படி காரில் வந்தவர்களிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கூறி அனுப்பி வைத்தார்.