புதுக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் கொண்டாட்டம்

புதுக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் கொண்டாடபட்டது.

Update: 2024-05-12 10:09 GMT

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் கொண்டாட்டம்

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் 70 கிலோ கேக்குகளைவெட்டி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் முகமூடி அணிந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளரும் மாண எடப்பாடி பழனிசாமியின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி எதிரில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பழனிவேல் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு முட்டையுடன் கூடிய மட்டன் பிரியாணி மற்றும் இளநீர் நுங்கு தர்பூசணி லேசி சர்பத் உள்ளிட்டங்களை பொதுமக்களுக்கு முன்னாள் அதிமுக சுகாதாரத்துறை அமைச்சரும்,

விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் அதிமுக வடக்கு மாவட்ட கழக செயலாளருமான விஜயபாஸ்கர் பொதுமக்களுக்கு வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்வில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவம் பறித்த முகமூடியை அணிந்து கொண்டு சிறுவர்களுக்கு விஜயபாஸ்கர் பிரியாணியை சிறுவர்களுக்கு ஊட்டி விட்டு மகிழ்ந்தார். சிறுவர்களை கட்சி நிர்வாகிகள் தோளில்தூக்கி வைத்துக்கொண்டு இரட்டை இலை சின்னத்தை காண்பிக்க சொல்லிமகிழ்ச்சி அடைந்தனர். மேலும் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு 70 கிலோ கேட்கையும் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News