ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் - கலந்து கொள்ள அழைப்பு
ஆத்தூரில் நடைபெறும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டத்தில் கட்சியினர் திரளாக பங்கேற்க சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார்.;
Update: 2024-04-14 04:21 GMT
எடப்பாடி பழனிசாமி
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராணிப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை இன்று மாலை நடைபெற உள்ளதால் அனைத்து நகர, ஒன்றிய ,பேரூர் நிர்வாகிகள் கலந்துகொள்ள சேலம் புறநகர் மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார்.