மூன்லைட் ரிசார்ட்டை துவக்கி வைத்த எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட மூன் லைட் ரிசார்ட்டை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.;
Update: 2024-03-07 06:18 GMT
ரிசார்ட் திறப்பு விழா
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியின் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட மூன் லைட் ரிசார்ட்ஸ் துவக்க விழா நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய ரிசார்ட்டை ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் துவக்கி வைத்து சிறப்பித்தார். அப்போது எடப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ், நெடுங்குளம் ஊராட்சி தெற்கு ஒன்றிய செயலாளர் துறை (எ)மாதேஸ்வரன், கொங்கணாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கரட்டூர் மணி, மற்றும் எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் அதிமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர் ...