எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள்: தங்க தேர் இழுத்த அதிமுக வினர்

எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக வினர் திண்டல் வேலாயுத சாமி கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபாடு நடத்தினர்.

Update: 2024-05-14 06:00 GMT

எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக வினர் திண்டல் வேலாயுத சாமி கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபாடு நடத்தினர்.


முன்னாள் முதலமைச்சரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை யொட்டி சூரியம்பாளையம் பகுதி அதிமுக சார்பில் ஆர் என் புதூரில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோடு திண்டல் வேலாயுத சாமி கோவிலில் சூரியம்பாளையம் பகுதி அதிமுக சார்பில் தங்கத் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் கே வி ராமலிங்கம் தலைமையில் முன்னாள் அமைச்சர் கே சி கருப்பணன் கலந்து கொண்டு தங்க தேரை இழுத்து தொடங்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் பி சி ராமசாமி , முன்னாள் எம்எல்ஏ தென்னரசு , மாணவர் அணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் வீரக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சூரியம்பாளையம் பகுதி அதிமுக செயலாளரும் முன்னாள் துணை மேயருமான கே சி பழனிசாமி செய்திருந்தார்
Tags:    

Similar News