எடப்பாடி : இளைஞரணி இருசக்கர பேரணி திமுகவினர் உற்சாக வரவேற்பு
சேலத்தில் திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு 13 நாட்கள் 9500 கிலோ மீட்டர் தூரம் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக நேற்று பூலாம்பட்டி, எடப்பாடி நகரம், கொங்கணாபுரம் ஒன்றியம், மற்றும் சங்ககிரி, மகுடஞ்சாவடி, உள்ளிட்ட இடங்களில் இளைஞர் அணி சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பூலாம்பட்டி பகுதிக்கு வருகை புரிந்த போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திமுக இளைஞர் அணியினர் பட்டாசு வெடித்து மேளம் தாளம் முழங்க உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பூலாம்பட்டியிலிருந்து எடப்பாடிக்கு சாலை வழியாக இருசக்கர வாகன பேரணி தொடங்கி வழி நெடுவிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
எடப்பாடி பேருந்து நிலையம் வருகை புரிந்த பேரணிக்கு மேளம் தாளம் முழங்க எடப்பாடி நகர கழக செயலாளர் டி எஸ் எம். பாஷா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது,பின்னர் மாநில இளைஞரணி பொருளாளர் ராஜா தமிழ்மாறன் பேசுகையில், அதிமுகவை நிராகரிப்போம் என அனைவரும் ஒன்று சேர்ந்து முழக்கமிட்டனர். அதன் பின்னர் எடப்பாடியிலிருந்து கொங்கணாபுரம் சாலை வழியாக சென்றபோது திமுக ஒன்றிய சார்பில் பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து சங்ககிரியில் முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட செயலாளருமான டி.எம். செல்வகணபதி,உற்சாக வரவேற்பு அளித்தார் அப்போது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பேரணியில் கலந்து கொண்டார். அங்கிருந்து மகுடஞ்சாவடி ஒன்றியத்திற்கு வருகை புரிந்த பேரணியை உற்சாக வரவேற்பு அளித்து அனைவருக்கும் பொன்னாடை அணிவித்தனர்..
சேலத்தில் திமுக இளைஞரணி சார்பில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுவதையொட்டி நவம்பர்-17 முதல்-27 வரை 13 நாட்களில் 9500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 54 பிரச்சாரம் மையங்கள் மற்றும் 188 இருசக்கர வாகன பேரணி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேரணியில் முன்னாள் அமைச்சர் டி.எம் செல்வகணபதி, மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார், மாநில இளைஞரணி பொருளாளர் ராஜா தமிழ்மாறன்,உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.