மாணவ,மாணவிகளுக்கு கல்வி உபகரண உதவி
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், ஸ்கூல் பேக், உள்ளிட்ட பொருட்களை ஃபைட் கிளப் திரைப்படத்தின் கதாநாயகன் விஜயகுமார் ரசிகர்கள் வழங்கினார்.;
Update: 2023-12-28 07:10 GMT
கல்வி உபகரணங்கள் வழங்கல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்ததால் பள்ளி மாணவ மாணவிகளின் பாட புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் நீரில் மூழ்கி சேதமடைந்தது. இந்த நிலையில் பள்ளி பாட புத்தகங்கள் இழந்து தவித்த மாணவ மாணவிகளுக்கு பைட் கிளப் திரைப்படத்தின் கதாநாயகன் விஜயகுமார் ரசிகர்கள் சார்பில் இன்று பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், ஸ்கூல் பேக், பேனா, பென்சில், வாட்டர் பாட்டில், உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வழங்கினர்.