மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

கோவில்பட்டியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.;

Update: 2024-07-16 04:48 GMT
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

மக்கள் நலம் அறக்கட்டளை

  • whatsapp icon

கோவில்பட்டியில் மக்கள் நலம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மக்கள் நலம் அறக்கட்டளையின் 4ம் ஆண்டு துவக்க விழா எல்.ஜி செல்வமஹாலில் அறக்கட்டளை தலைவர் மாரிமுத்துக் குமார் தலைமையில் நடந்தது.

ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவிமாணிக்கம், வெங்கடேஷ், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை செயலாளர் கணேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார். கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், டாக்டர் ஸ்ரீ வெங்கடேஷ், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 50 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களையும், சமூக சேவையாற்றும் காளிதாஸ், ராஜேந்திரன், ரூபராஜ், ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கியும் பாராட்டி பேசினர்.

இதில் அறக்கட்டளை பொருளாளர் முகமது ராபி, மேனாள் வேளாண்மை துறை அலுவலர் குணசேகரன், கருத்துரிமை பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் தமிழரசன், பெஞ்சமின் பிராங்கிளின், சுபேதார், வக்கீல் ஜெய் ஸ்ரீ கிறிஸ்டோபர், ராதாகிருஷ்ணன், சொர்ணவேல், சுரேஷ்குமார், பாலாஜி, உள்பட பலர் கலந்து கொண்டனர். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கற்குவேல் ராஜன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News