கல்விக் கடன் சிறப்பு முகாம்
கல்விக் கடன் சிறப்பு முகாமில் கடனுதவிக்கான காசோலை வழங்கினார் ஆட்சியர்;
Update: 2024-02-15 08:59 GMT
காசோலை வழங்கினார் ஆட்சியர்
ஈரோட்டில் தனியார் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய மாபெரும் கல்விக் கடன் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 40 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வங்கி கடனுதவிக்கான காசோலை மற்றும் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு 1195 மாணவர்களுக்கு ரூ.64 கோடி கல்விக்கடன் அனுமதி வழங்கப்பட்டது. அதில் 480 பெண்களுக்கு ரூ.23 கோடி ஒதுக்கப்பட்டது. கனரா, யூனியன் வங்கி, எஸ்.பி.ஐ. ஆகிய வங்கிகள் அதிக கடனுதவிகள் வழங்கியுள்ளது. எனவே நடைபெறும் இம்மாபெரும் கல்வி கடன் முகாமில் பங்கேற்றுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடனுதவி பெற விண்ணப்பித்து, எவ்வித பயமும், தயக்கமுமின்றி கடனுதவிகளை பெற்று தங்களது வாழ்வில் முன்னேற வேண்டும் என வாழ்த்துகிறேன் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.