திருவள்ளூர் அருகே முதியவர் சடலம் மீட்பு
திருவள்ளூர் அருகே முதியவர் சடலம் மீட்பு. போலீசார் விசாரணை.;
Update: 2024-03-19 17:48 GMT
ஆண் சடலம்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஊராட்சியில், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக திருவாலங்காடு போலீசாருக்கு வி.ஏ.ஓ., சத்தியராஜ் தகவல் தெரிவித்தார். போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் இறந்த நபர் சுப்பிரமணி, 61 என்பதும். இவர் அதே பகுதியில் கடந்த ஓராண்டாக சுற்றித்திரிந்ததும் தெரிய வந்தது.