அரளிக்காய் சாப்பிட்டு முதியவர் தற்கொலை

சாணார்பட்டி அருகே அரளிக்காய் சாப்பிட்டு முதியவர் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;

Update: 2024-06-18 08:00 GMT
அரளிக்காய் சாப்பிட்டு முதியவர் தற்கொலை

அரளிக்காய் 

  • whatsapp icon
திண்டுக்கல் சாணார்பட்டி ராகலாபுரம் அருகே பொம்மைய கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 62. இவரது மனைவி சுப்பம்மாள் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திங்கட்கிழமை மதியம் 2 மணி அளவில் வீட்டில் அரளிக்காய் சாப்பிட்டு பழனிச்சாமி மயங்கி கிடந்தார். இதனைப் பார்த்த உறவினர்கள் இவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து சாணார்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News