வீட்டில் வழுக்கி விழுந்ததில் முதியவர் பலி
குமாரபாளையத்தில் வீட்டில் வழுக்கி விழுந்ததில் முதியவர் பலியானர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-06 06:45 GMT
முதியவர் பலி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அய்யன்தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் ஜகந்நாதன், 83. தி.மு.க. மூத்த நிர்வாகி. இவர் நேற்றுமுன்தினம் அதிகாலை 02:00 மணியளவில் வீட்டில் கழிவறைக்கு செல்ல நடந்து சென்ற போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவரை குமாரபாளையம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தலையில் பலத்த அடிபட்டதால் உயிர் பிழைப்பது கடினம் என்பதால் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு 08:45 மணியளவில் இறந்தார். இது குறித்து இவரது மகள், பிரியா, 43, குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.