இருசக்கர வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம், அம்மாபாளையத்தில் இருசக்கர வாகனத்தில் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-02-10 08:39 GMT
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜப்பன் இவருக்கு வயது 70 கட்டிட தொழிலாளியான. இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் பாப்பம்பாடி கிராமத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது ஏ.பள்ளிப்பட்டி அருகே எதிரே வந்த இருசக்கர வாகனம் ராஜப்பன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ராஜப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜப்பன் உயிரிழந்தார். இது குறித்து ஏ.பள்ளிப் பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.