கூரை அமைக்கும் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த முதியவர் உயிரிழப்பு
மொரப்பூர் வட்டத்துக்கு உட்பட்ட அம்பாலப்பட்டி கிராமத்தை சேர்ந்த முதியவர் கூரை அமைக்கும் பணியில் எதிர்பாராதமாக கீழே விழுந்து உயிரிழந்தார். இது குறித்து மொரப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Update: 2024-03-08 09:19 GMT
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மொரப்பூர் அம்பாலப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேடியப்பன் இவரது இரண்டு மகன்கள் கோவையில் பணியாற்றி வருகின்றனர். வேடியப்பன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று, அவர் வீட்டின் மேற்பகுதியில் கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு அரூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மொரப்பூர் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.