ஶ்ரீரங்கம் அருகே விஷவண்டு கடித்து மூதாட்டி உயிரிழப்பு
விஷ வண்டு கடித்து மூதாட்டி உயிரிழந்தது தொடா்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-29 08:45 GMT
கோப்பு படம்
திருச்சி மாவட்டம், குழுமணியை அடுத்த பேரூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரெங்கம்மாள் (75). இவா், பெருகமணியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தாா். திங்கள்கிழமை தனது மகளுக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றபோது, விஷ வண்டு (கதண்டு) கடித்து மயங்கி விழுந்தாா்.
அருகிலிருந்தோா் அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவா் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுதொடா்பாக, பேட்டைவாத்தலை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.